NATIONAL

சந்தேக நபர் கடித்ததில் காவல்துறை அதிகாரியின் மோதிர விரல் துண்டானது

19 ஏப்ரல் 2023, 10:28 AM
சந்தேக நபர் கடித்ததில் காவல்துறை அதிகாரியின் மோதிர விரல் துண்டானது

ஷா ஆலம், ஏப்.19: நேற்று சுங்கை பிசி காவல் நிலைய காவலர் சாவடிக்குள் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர் கடித்ததில் காவல்துறை அதிகாரியின் மோதிர விரல் துண்டானது.

சிராஸ் மாவட்டக் காவல்துறை தலைமை உதவி ஆணையர் ஜாம் ஹலீம் ஜமாலுடின் கூறுகையில், 34 வயதான அந்த நபர் இரவு 10.15 மணியளவில் செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

"சந்தேக நபர் காவல்துறை அதிகாரியை வலது கையில் உள்ள மோதிர விரலின் நுனி துண்டாக்கும் வரை கடித்து ஆக்ரோஷமாக செயல்பட்டார்," என்று தெரிவித்தார்.

பின்னர், கைது செய்யப்பட்ட அந்த நபருக்கு இதற்கு முன் மோசடி வழக்கு பதிவுகள் உள்ளதாகவும், அவரது சிறுநீரில் ஆம்பெட்டமைன் மற்றும் மெத்தாம்பேட்டமைன் ஆகிய போதைப்பொருளுக்கு பாசிட்டிவ் என்று ஆரம்பப் பரிசோதனையில் தெரியவந்ததாகவும் ஜாம் ஹலிம் விளக்கினார்.

குற்றவியல் சட்டப்பிரிவு 325/427 மற்றும் காவல்துறை சட்டம் 1967 இன் பிரிவு 90 இன் கீழ் விசாரணைக்காக அந்த நபர் இன்று முதல் ஏப்ரல் 21 வரை நான்கு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.