NATIONAL

சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மூன்று பேர் கைது

19 ஏப்ரல் 2023, 2:23 AM
சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மூன்று பேர் கைது

ஈப்போ, ஏப்ரல் 19: மஞ்சோங்கில் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில்

தொடர்புடையதாகக் கருதப்படும் ஒரு பெண் உட்பட மூன்று பேரைக் காவல்துறையினர்

நேற்று கைது செய்தனர்.

மஞ்சோங் மாவட்டக் காவல்துறையின் இடைக்கால தலைமை அதிகாரி டிஎஸ்பி சோங் பூ கிம் கூறுகையில், நேற்று காலை 11.50 மணியளவில் ஏழு வயது சிறுமியை ஒரு நபர்

சாலையோரத்தில் கண்டு மஞ்சோங்கில் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச்

சென்றுள்ளார்.

காவல்துறை அச்சிறுமியை மேல் சிகிச்சைக்காகச் ஶ்ரீ மஞ்சோங் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது மற்றும் பரிசோதனையின் முடிவில், பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி உள்ளதாக நம்பப்படுகிறது.

மஞ்சோங் மாவட்டக் காவல்துறை தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவைச்

சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் 26 முதல் 40 வயதுக்குட்பட்ட அனைத்து சந்தேக

நபர்களையும் காவல் நிலையத்தில் இரவு 9.30 மணியளவில் தடுத்து வைத்துள்ளனர்"

என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

குழந்தைகள் சட்டம் 2001 இன் பிரிவு 31(1)(a) மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல்

குற்றச் சட்டத்தின் 14(a) ஆகியவற்றின் கீழ் விசாரணைக்கு உதவ கடந்த குற்றப்

பதிவுகளைக் கொண்ட அனைத்து சந்தேக நபர்களும் ஏப்ரல் 23 வரை காவலில்

வைக்கப்பட்டுள்ளனர் என்று சோங் கூறினார்.

– பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.