NATIONAL

ஆற்றில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர்

17 ஏப்ரல் 2023, 2:24 AM
ஆற்றில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர்

ஜொகூர் பாரு, ஏப்ரல் 16: கடந்த வெள்ளிக்கிழமை செகமாட், கம்போங் புக்கிட் துங்காலில் உள்ள புலாவ் ஜெரிங் ஆற்றில் குளித்த கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

அஹ்மத் முஹம்மது இப்னு ஹெர்மி (12) மற்றும் முஹம்மது கலிஃபி கமருசாமான் (13) என அடையாளம் காணப்பட்ட அவ்விருவரும் புக்கிட் துங்கால் தேசியப் பள்ளி மற்றும் ஜெமெண்தா தேசிய உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் என்று செகாமாட் மாவட்டக் காவல்துறைத் தலைவர்  சூப்ரிண்டெண்டன் அஹ்மட் சம்ரி மரின்சா கூறினார்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தாரிடம் இருந்து மாலை 5.10 மணியளவில் இச்சம்பவம் தொடர்பான புகாரைத் தமது தரப்பு பெற்றதாக அவர் கூறினார்.

"பொதுமக்களின் உதவியுடன், பாதிக்கப்பட்ட இருவரும் ஆற்றில் இருந்து வெளியேற்றப்பட்டனர். ஆனால் அப்போது அவர்கள் சுயநினைவற்ற நிலையில் இருந்தனர்," என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், பாதிக்கப்பட்ட இருவரும் அருகிலுள்ள தனியார் கிளினிக்கில் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர்.

அஹ்மத் முஹம்மது மற்றும் முஹம்மது கலிஃபி ஆகியோரின் சடலங்கள் நேற்று கம்போங் புக்கிட் துங்கால் இஸ்லாமிய கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டன.

- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.