ACTIVITIES AND ADS

நோன்புப் பெருநாளை முன்னிட்டு மாபெரும் மலிவு விற்பனை- இன்று தொடங்குகிறது

15 ஏப்ரல் 2023, 4:12 AM
நோன்புப் பெருநாளை முன்னிட்டு மாபெரும் மலிவு விற்பனை- இன்று தொடங்குகிறது

ஷா ஆலம், ஆலம் ஏப் 15- சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டிலான 2023 ஏசான் அய்டில்பித்ரி நோன்புப் பெருநாள் மாபெரும் மலிவு விற்பனை இன்று தொடங்கி 23 இடங்களில் நடைபெறவுள்ளது.

சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தினால் நடத்தப்படும் இந்த மலிவு விற்பனை வரும் வியாழக்கிழமை வரை மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படும். 

இந்த விற்பனை இன்று ஒன்பது இடங்களிலும் நாளை 10 இடங்களிலும் நடைபெறும் வேளையில் திங்கள்கிழமை தொடங்கி இறுதி நாள் வரை தலா ஒரு இடத்தில் நடத்தப்படும்.

சந்தையை விட குறைவான விலையில் பொது மக்கள் பொருள்களை வாங்குவதை உறுதி செய்யும் நோக்கில் இந்த நோன்புப் பெருநாளின் போது பிரத்தியேகமாக இந்த திட்டத்தை மாநில அரசு அமல்படுத்தியுள்ளது.

இவ்விற்பனை ஜென்டேரான் ஹிலிர், கிளானா ஜெயா, கோல சிலாங்கூர் தாமான் சவுஜானா உத்தமா, உலு பெர்ணம் ஆகிய இடங்களில் இன்று காலை 7.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை நடைபெறவுள்ளது.

சுங்கை பெசார், தஞ்சோங் சிப்பாட், புக்கிட் செந்தோசா ஆகிய இடங்களில் இந்த விற்பனை காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடைபெறும். 

இவை தவிர ஷா ஆலம் செக்சன் 24இல் காலை 10.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரையிலும் செக்சன் 25, ஷா ஆலம் லாமான் நியாகா உசாஹவான் கோஹிஜ்ராவில் மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரையிலும் இந்த விற்னையை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வகைeconomy

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.