கோலாலம்பூர், ஏப்ரல் 14- இங்குள்ள பத்து கேவ்ஸ், தாமான் செலாயாங் ஜெயாவில் உள்ள குழந்தை பராமரிப்பாளரின் வீட்டில் சுயநினைவின்றி காணப்பட்ட நான்கு மாத ஆண் குழந்தை செலாயாங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.செலாயாங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்த குழந்தை ஏப்ரல் 12 ஆம் தேதி காலை 11.53 மணியளவில் இறந்துவிட்டது மருத்துவ அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டது என்று கோம்பாக் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி ஜைனல் முகமது முகமது கூறினார்.
பிரேதப் பரிசோதனையில் பிறவி இதயக் குறைபாடு காரணமாக அக்குழந்தை இறந்தது உறுதி என்று அவர் தெரிவித்தார்.
47 வயதான குழந்தையின் பராமரிப்பாளர் நேற்று காலை 11.00 மணியளவில் குழந்தையை எழுப்ப முயன்றபோது குழந்தை சுயநினைவின்றி காணப்பட்டுள்ளது.
அந்த பராமரிப்பாளர் குழந்தையின் நிலையை தெரிவிக்க அவரின் தாயை உடனடியாகத் தொடர்பு கொண்டார் என்று ஜைனல் இன்று ஒரு அறிக்கையில் குறிப்பிட்டார்.
போலீசார் இந்த சம்பவத்தை திடீர் மரணம் என வகைப்படுத்தியுள்ளனர் மேலும் மேலும் தகவல் தெரிந்தவர்கள் விசாரணை அதிகாரி ஜே.வின்சன் ஜோசப்பை 016-2335454 அல்லது கோம்பாக் மாவட்ட காவல்துறை தலைமையகத்தை 03-61262222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
ACTIVITIES AND ADS
சுயநினைவற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு
14 ஏப்ரல் 2023, 2:35 AM
தொடர்புடைய செய்திகள்
activities-and ads
இந்து ஆலயங்கள் எதிர்நோக்கும் நிலப் பிரச்சனைக்கு தீர்வு காண -ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பா ராய்டு முயற்சி
n.pakiya
15 பிப்ரவரி 2024

national
கோத்தா கெமுனிங் தொகுதி ஏற்பாட்டில் இலவச சட்ட ஆலோசக உதவி
n.pakiya
14 பிப்ரவரி 2024

activities-and ads
ஏசான் ரஹ்மா விற்பனைக்கு மக்கள் பேராதரவு இசூவான் காசிம் பெருமிதம்
n.pakiya
1 பிப்ரவரி 2024

alam-sekitar & cuaca
'துருன் அன்வர்' போராட்டக்காரர்கள் கோலாலம்பூர் வீதிகளில் 20 டன் குப்பையை விட்டுச் சென்றார்கள்! ஙா கோர் மிங்
n.pakiya
28 ஜூலை 2025

உங்கள் கருத்து என்ன?




