NATIONAL

பொது உயர் கல்வி நிறுவன மாணவர்களுக்கான சிறப்பு விமான டிக்கெட் விலையை அரசு விரைவில் அறிவிக்கும்

13 ஏப்ரல் 2023, 7:15 AM
பொது உயர் கல்வி நிறுவன மாணவர்களுக்கான சிறப்பு விமான டிக்கெட் விலையை அரசு விரைவில் அறிவிக்கும்

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 13: பொது உயர் கல்வி நிறுவன மாணவர்களுக்கான சிறப்பு விமான டிக்கெட் விலையை அரசு விரைவில் அறிவிக்கும்.

தீபகற்பத்தில் படிப்பைத் தொடரும் சபா மற்றும் சரவாக் மாணவர்களும், சபா மற்றும் சரவாக்கில் படிக்கும் தீபகற்பத்தைச் சேர்ந்த மாணவர்களும் இதில் இலக்காக உள்ளனர் என போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.

விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும் தேவைக்கு ஏற்ப இடமளிக்க முடியவில்லை என்று அவர் கூறினார்.

"ஹரி ராயா ஐடில்பித்ரியைக் கொண்டாட, தற்போது அதிக விலையுள்ள வணிக வகுப்பு டிக்கெட்டுகள் மட்டுமே உள்ளன. மாணவர்களுக்கு (டிக்கெட் வாங்க) அரசு மானியத்துடன் கூடிய திட்டங்களை நாங்கள் வகுத்துள்ளோம்," என்று அவர் கூறினார்.

நேற்று பிரசரண மலேசியா பெர்ஹாட் ஊழியர்களுடன் நோன்பு துறக்கும் விழாவில் கலந்து கொண்ட பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

– பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.