NATIONAL

பூச்சோங்கில் புயலால் பாதிக்கப்பட்ட 175 பேர் உதவி பெற்றனர்

11 ஏப்ரல் 2023, 8:34 AM
பூச்சோங்கில் புயலால் பாதிக்கப்பட்ட 175 பேர் உதவி பெற்றனர்

ஷா ஆலம், ஏப் 11- பூச்சோங்கில் அண்மையில் ஏற்பட்ட புயல் காற்றில்

பாதிக்கப்பட்ட 175 பேர் சிலாங்கூர் ஸக்கத் வாரியத்திடமிருந்து உதவி

பெற்றனர்.

பாதிக்கப்பட்ட மக்களை நேற்று நேரில் சென்று கண்ட சிலாங்வர் ஸக்கத்

வாரியத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரி முகமது சப்ரின் சர்பினி

அவர்களுக்கு உணவுப் பொட்டங்களையும் விநியோகித்ததாக

அவ்வாரியத்தின் வர்த்தகத் தொடர்புப் பிரிவுத் தலைவர் டத்தின் செத்தியா

நராஜூன் அய்னுன் முகமது ஹஷிம் கூறினார்.

இந்த புயல்காற்றில் மரம் விழுந்து வீடுகள் சேதமடைந்தவர்களுக்குத்

தற்காலிக அடிப்படையில் வாடகை வீடுகளைப் பெற்றுத் தருவதற்கும்

அந்த வீடுகளுக்கான வாடகையை ஸக்கத் வாரியம் ஏற்றுக்

கொள்வதற்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.