NATIONAL

மானிய விலை சமையல் எண்ணெய் விவகாரம்- முன்னாள் அமைச்சரின் மகன் உள்பட இருவர் மீது குற்றச்சாட்டு

6 ஏப்ரல் 2023, 4:46 AM
மானிய விலை சமையல் எண்ணெய் விவகாரம்- முன்னாள் அமைச்சரின் மகன் உள்பட இருவர் மீது குற்றச்சாட்டு

சிரம்பான், ஏப் 6- மானிய விலை சமையல் எண்ணைய் கையிருப்பை

அனுமதிக்கப்பட்டதை விட அதிகமாக வைத்திருந்தது மற்றும் போலி

ரசீதுகளை வழங்கியது தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஹம்சா ஜைனுடினின்

மகன் உட்பட இருவர் ஒன்பது குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளனர்.

இக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னாள் உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ

ஹம்சா ஜைனடின் மகனான முகமது ஃபைசால் ஹம்சா (வயது 39)

மற்றும் அசிசுல் அப்துல் ஹலிம் (வயது 55) ஆகிய இருவர் மீது இங்குள்ள

செஷன்ஸ் நீதிமன்றத்தில் நேற்று குற்றஞ்சாட்டப்பட்டது.

நீதிபதி மஸ்னி நாவி முன்னிலையில் தங்களுக்கு எதிராக சுமத்தப்பட்ட

குற்றச்சாட்டை அவ்விருவரும் மறுத்து விசாரணை கோரினர்.

சமையல் எண்ணெய்க்கான மொத்த விற்பனை உரிமத்தை ரிம்பா மெர்பாத்தி நிறுவனம்

பெற்றிருந்தது. இந்நிறுவனத்தின் இயக்குநர்களாக அஸிசூல் அப்துல் ஹலிம், எதிர்க்கட்சி

தலைவர் ஹம்சா ஜைனுடினின் மகன் ஃபைசால் ஹம்சா ஆகியோர் உள்ளனர்.

அந்த கட்டுப்படுத்தப்பட்ட உணவுப் மூலப் பொருள் விற்பனை தொடர்பில்

போலி ஆவணங்கள் அல்லது ரசீதுகளை வழங்கியதாக அவர்களுக்கு

எதிரான குற்றப்பத்திரகையில் கூறப்படுள்ளது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.