கோலா திரங்கானு, ஏப்ரல் 6: இன்சூரன்ஸ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் போல் காட்டிக் கொண்டு 'போன் கேம்' சிண்டிகேட் மூலம் ஏமாற்றப்பட்டு இரண்டு சகோதரிகள் ரி.ம 658,000 இழந்துள்ளனர்.
கோலா திரங்கானு மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி அப்துல் ரஹீம் முகமாட் டின் கூறுகையில், முதலில் 56 வயது பெண் ஆசிரியராக பணிபுரிந்தவர் ஏமாற்றப்பட்டார். பிறகு அவரது சகோதரி 62 வயது தனியார் துறையில் இருந்து ஓய்வு பெற்றவரும் ஏமாற்றப்பட்டதாக கூ
சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனைக்கான மற்றும் போதைப்பொருள் நடவடிக்கைகளுக்குத் தங்கள் தனிப்பட்ட தகவல்கள் தவறாகப் பயன்படுத்த பட்டதாகக் கூறினார்.
"பாதிக்கப் பட்டவர்களில் ஒருவர் கணக்கில் சேமித்து வைக்கப்பட்ட பணம் ரி.ம 500,000 குறைந்ததை கண்டறிந்தனர், மேலும் மற்றொருவர் ரி.ம 158,000 குறைந்ததாக கூறி, அவர்கள் நேற்று கோலா திரங்கானு மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் ஒரு புகார் அளித்தனர்," என்று அவர் கூறினார்.
– பெர்னாமா








