NATIONAL

ஈய சுரங்க குட்டையில்  விழுந்து மூழ்கிய இளைஞன் மரணம்

5 ஏப்ரல் 2023, 3:05 AM
ஈய சுரங்க குட்டையில்  விழுந்து மூழ்கிய இளைஞன் மரணம்

கோலாலம்பூர், ஏப்ரல் 5: உலு சிலாங்கூர் அருகே உள்ள தாசிக் கியாம்பாங், செரண்டாவில், மீன்பிடித்துக் கொண்டிருந்த போது சுரங்கத்தில் விழுந்து மூழ்கியதாக நம்பப்படும் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உலு சிலாங்கூர் மாவட்டக் காவல்துறைத் தலைமைக் கண்காணிப்பாளர் அஹ்மத் ஃபைசல் தஹ்ரிம், உயிரிழந்த 26 வயது இளைஞர் கண்டுபிடிக்கப்பட்டதாக அவரது தந்தை மதியம் 2.47 மணி அளவில் தெரிவித்ததாகக் கூறினார்.

"சம்பவம் நடந்த இடத்திற்கு வந்தபோது, அந்நபர் இறந்தது கண்டு பாதிக்கப்பட்டவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகக் கோலா குபூ பாரு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது," என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப் பட்டுள்ளது என்றார்.

சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குனர் மோர்னி மாமத் கூறுகையில், பாதிக்கப்பட்டவர், நேற்று இரவு முதல் காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் புகார் அளித்தனர். பின்னர் அவர் சுரங்கத்தின் ஓர் ஓரத்தில் கண்டுபிடிக்கப்பட்டார்.

 – பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.