MEDIA STATEMENT

மாட்சிமை தங்கிய தெங்கு பெர்மைசூரி, ஷா ஆலம் ரம்லான் பஜாரைப் பார்வையிட்டார்

4 ஏப்ரல் 2023, 11:32 AM
மாட்சிமை தங்கிய தெங்கு பெர்மைசூரி, ஷா ஆலம் ரம்லான் பஜாரைப் பார்வையிட்டார்

ஷா ஆலம், ஏப்ரல் 4: ஷா ஆலம் அரங்கத்தில் உள்ள ரம்லான் பஜாரைப் பார்வையிட மாட்சிமை தங்கிய  (DYMM) தெங்கு பெர்மைசூரி சிலாங்கூர் நேற்று வருகை புரிந்தார்.

பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கும் பிரச்சாரத்திற்கு ஆதரவு அளிக்கும்  வகையில் பச்சை நிறப் பாஜு கூருங் அணிந்திருந்த தெங்கு பெர்மைசூரி நோராஷிகின், அதே நிறத்தில் ஒரு கூடையையும் கொண்டு வந்தார்.

வணிகர்கள் மற்றும் பஜாருக்கு வருபவர்களுடன் நட்பாக இருந்ததோடு, நோன்பு திறப்பதற்கு பல்வேறு உணவுகளை வாங்குவதற்குச் சுமார் ஒரு மணி நேரம் செலவிட்டார்.

பாஜாரில் இருந்த வணிகர் ஒருவர் பெர்மைசூரி நோராஷிகின் தன் கடைக்கு வருகை புரிந்தது ஆச்சரியமடைய செய்தது எனக் கூறினார்.

"அவர் ஆர்டர் செய்த உணவைச் சமைத்து தயார் செய்ய வேண்டும் என நினைத்தபோது எனக்கு நடுக்கம் ஏற்பட்டது.

''அவரது நோன்பு திறக்கும் உணவைத் தயார் செய்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்," என்று அவர் கூறினார்.''

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.