NATIONAL

2024 வரவு செலவுத் திட்டத்தை வரைவதில் கருத்துக்களைத் தெரிவிக்க உள்ளூர் மக்களுக்கு அழைப்பு 

4 ஏப்ரல் 2023, 3:21 AM
2024 வரவு செலவுத் திட்டத்தை வரைவதில் கருத்துக்களைத் தெரிவிக்க உள்ளூர் மக்களுக்கு அழைப்பு 

ஷா ஆலம், ஏப்ரல் 4: செலாயாங் நகராட்சி (எம்பிஎஸ்), ஏப்ரல் 1 முதல் 22 வரை 2024 வரவு செலவுத் திட்டத்தை வரைவதில் கருத்துக்களைத் தெரிவிக்க உள்ளூர் மக்களை அழைக்கிறது.

கார்ப்பரேட் துறையின் மக்கள் தொடர்பு பிரிவின் கீழ், வரையப்படும் வரவு செலவுத் திட்டம் செலாயாங் நகராட்சியில் வாழ்பவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடியதாகவும் மற்றும்  பொது நலனை உறுதி செய்யக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.

"2024 ஆம் ஆண்டுக்கான செலாயாங் மாநகராட்சி பட்ஜெட் தேவைக்கேற்ப தயாரிக்கப் படுவதை உறுதி செய்வதற்கான கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை வழங்க குடியிருப்பாளர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்," என்று ஓர் அறிக்கையின் மூலம் தெரிவிக்கப்பட்டது.

மேலும்  கூறுகையில் செலாயாங் நகராட்சி  பல்வேறு  விவகாரங்கள் குறித்து மக்களிடம் கருத்துக் கணிப்பை மேற்கொண்டு வருகிறது, கேள்விகளுக்கு  முழுமையாக பதிலளிக்கும் 20 நபர்களுக்கு செலாயாங் மாநகராட்சி RM100 ரொக்கப் பரிசை வழங்கும்.

" வெற்றியாளர்களின் பட்டியல் செலாயாங் மாநகராட்சி அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் சமூக ஊடக தளங்களில் மே 15 அன்று அறிவிக்கப்படும்," .

https://forms.gle/nb695X9bCt6UbscVA என்ற இணைப்பின் மூலம் பொதுமக்கள் இந்தக் கருத்துக்கணிப்பில் பங்கேற்கலாம். ஏதேனும் கேள்விகள் இருந்தால் செலாயாங் மாநகராட்சி கார்ப்பரேட் துறையை 03-6126 5800 என்ற எண்ணின் மூலம் தொடர்பு கொள்ளலாம் அல்லது aduanmps@mps.gov.my  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.