NATIONAL

நாடு முழுவதும் சுற்றுச்சூழலுக்குக் குந்தகமான  3,355  இடம்  அடையாளம் காணப்பட்டு அபராதங்கள் விதிக்கப்பட்டது - சுற்றுச்சூழல் துறை

4 ஏப்ரல் 2023, 2:30 AM
நாடு முழுவதும் சுற்றுச்சூழலுக்குக் குந்தகமான  3,355  இடம்  அடையாளம் காணப்பட்டு அபராதங்கள் விதிக்கப்பட்டது - சுற்றுச்சூழல் துறை

புத்ராஜெயா, ஏப்ரல் 4: சுற்றுச்சூழல் துறை (DOE) நாடு முழுவதும் உள்ள 4,364 தொழிற்துறை வளாகங்களில் கெம்போர் சோதனை நடவடிக்கை 2022 மூலம் RM6 மில்லியன் மதிப்புள்ள மொத்தம் 3,355 அபராதங்களை வெளியிட்டுள்ளது.

சுற்றுச்சூழல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சுற்றுச்சூழல் தரச் சட்டம் 1974 மற்றும் அதன் கீழ் உள்ள விதிமுறைகளின் பல்வேறு மீறல்களை உள்ளடக்கிய அபராதங்கள் வெளியிடப்பட்டன என்று தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட சட்டத்திற்கு இணங்கத் தவறிய எந்தவொரு தொழில்துறை வளாகத்திற்கும் அறிவுறுத்தல், செயல்பாடுகளை நிறுத்துதல், தடை உத்தரவு மற்றும் உரிமம் இடைநிறுத்தம் பற்றிய அறிவிப்புகள் வழங்கப்படும்.

"சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் தொடர்ச்சியான முயற்சிகளில் இந்த சோதனை நடவடிக்கையும் செயல்படுத்தப்பட்டது என சுற்றுச்சூழல் துறை தெரிவித்தது.

– பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.