NATIONAL

புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநராக ஆயோப் கான் நியமனம்

29 மார்ச் 2023, 4:42 AM
புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநராக ஆயோப் கான் நியமனம்

கோலாலம்பூர், மார்ச் 29: புக்கிட் அமான் போதைப் பொருள் குற்ற

விசாரணைத் துறை தலைவர் டத்தோஸ்ரீ ஆயோப் கான் மைடின் பிச்சை

குற்றப்புலனாய்வுத் துறையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆயோப் கானின் பதவி நியமனம் வரும் ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி

முதல் அமலுக்கு வருவதாக அரச மலேசிய போலீஸ் படையின்

செயலாளர் டதோ நோர்ஷியா சாடுடின் கூறினார்.

விரைவில் கட்டாய ஓய்வு பெறவிருக்கும் புக்கிட் அமான்

குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோஸ்ரீ அப்துல் ஜாலில்

ஹசானுக்குப் பதிலாக ஆயோப் கான் அப்பொறுப்பை ஏற்பதாக அவர்

அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

கடந்த 2020 மார்ச் 6ஆம் தேதி முதல் ஜொகூர் மாநிலப் போலீஸ்

தலைவராகப் பொறுப்பேற்ற ஆயோப் கான் (வயது 57) கடந்த 2021 டிசம்பர்

25ஆம் தேதி போதைப் பொருள் விசாரணைத் துறையின் இயக்குநராகப்

பொறுப்பேற்றார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.