NATIONAL

சிப்ஸ் மாநாட்டிற்கு முன்கூட்டியே பதிவு செய்வோருக்கு 30 விழுக்காடு கழிவு

28 மார்ச் 2023, 4:20 AM
சிப்ஸ் மாநாட்டிற்கு முன்கூட்டியே பதிவு செய்வோருக்கு 30 விழுக்காடு கழிவு

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 28- சிப்ஸ் எனப்படும் சிலாங்கூர் அனைத்துலக

வர்த்தக மாநாட்டிற்கு முன்கூட்டியே பதிவு செய்யும்

கண்காட்சியாளர்களுக்கு 30 விழுக்காடு கட்டணக் கழிவு வழங்கப்படும்.

உணவு மற்றும் பானக் கண்காட்சி, மருத்துவக் கண்காட்சி மற்றும்

தொழில்துறை பூங்கா கண்காட்சி ஆகியவற்றுக்கு வரும் மார்ச் 31ஆம்

தேதிக்குள் பதிவு செய்யும் கண்காட்சியாளர்களுக்கு இந்தச் சலுகை

வழங்கப்படும் என்று முதலீட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர்டத்தோ தெங் சாங் கிம் கூறினார்.

இந்த சலுகையைப் பெற விரும்பும் கண்காட்சியாளர்கள் இன்வெஸ்ட்

சிலாங்கூர் செயலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று அவர் சொன்னார்.

உணவு, பான மற்றும் மருத்துவ கண்காட்சிக் கூடத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள

3x3 மீட்டர் பரப்பளவு கொண்ட இடத்திற்கு 6,160 வெள்ளி வாடகை

விதிக்கப்படுகிறது. தொழில் துறை கண்காட்சிக் கூடத்திற்கான கட்டணம்

6,860 வெள்ளியாகும் என்றார் அவர்.

இங்குள்ள ஷெரட்டோன் ஹோட்டலில் நேற்றிரவு நடைபெற்ற சிப்ஸ் 2023

தொடக்க விழா மற்றும் இஃப்தார் நிகழ்வில் உரையாற்றிய போது அவர்

இதனைத் தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.