NATIONAL

கம்போடியாவில் வேலை வாய்ப்பு மோசடியில் சிக்கிய மேலும் 12 பேர் மீட்பு

28 மார்ச் 2023, 3:08 AM
கம்போடியாவில் வேலை வாய்ப்பு மோசடியில் சிக்கிய மேலும் 12 பேர் மீட்பு

நோம் பென், மார்ச் 28- வேலை வாய்ப்புக் கும்பலின் ஆசை வார்த்தையில்

மயங்கி கம்போடியாவில் சிக்கிக் கொண்ட மலேசியர்களில் மேலும் 12 பேர்

மீட்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் கூறினார்.

அந்த பன்னிரண்டு பேரையும் விடுவிப்பதற்கான ஏற்பாடுகளை இங்குள்ள

மலேசியத் தூதரகம் மேற்கொள்ளும் என்று அவர் சொன்னார்.

இது, ஆக சமீபத்தில் எனக்கு கிடைத்த தகவலாகும்.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டது தவித்து மேலும் 12 பேர் வெற்றிகரமாக

விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றப் புதிய தகவல் எனக்கு கிடைத்துள்ளது

என்று பிரதமர் தெரிவித்தார்.

வேலை வாய்ப்பு மோசடிக் கும்பல்களிடம் சிக்கிய மலேசியர்களில் 287

பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக நேற்று மாலை பிரதமர் ஹான்

சென்னுடன் கூட்டாக நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் அவர்

கூறியிருந்தார்.

இதனிடையே, தங்களுக்கு கிடைத்துள்ள அந்த 12 பேரின் பெயர்களும்

ஏற்கனவே காணாமல் போனதாக புகார் செய்யப்பட்டவர்கள் பட்டியலில்

இடம் பெற்றுள்ளதாக கம்போடியாவுக்கான மலேசியத் தூதர் எல்டீன்

ஹூசாய்னி ஹஷிம் கூறினார்.

அந்த 12 பேரின் இருப்பிடத்திற்கு இன்று நேரில் சென்று அவர்களை

மீட்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளவிருப்பதாக அவர் மேலும்

குறிப்பிட்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.