ANTARABANGSA

கிள்ளான், ஷா ஆலமில் நீர் விநியோகம் இன்று அதிகாலை 6.00 மணிக்கு வழக்க நிலைக்குத் திரும்பியது

26 மார்ச் 2023, 1:56 AM
கிள்ளான், ஷா ஆலமில் நீர் விநியோகம் இன்று அதிகாலை 6.00 மணிக்கு வழக்க நிலைக்குத் திரும்பியது

ஷா ஆலம், மார்ச் 26- பழுதுபார்ப்புப் பணிகள்  காரணமாக நீர் விநியோகத் தடை ஏற்பட்ட கிள்ளான் மற்றும் ஷா ஆலம் வட்டாரத்தின் 55 பகுதிகளில் இன்று  அதிகாலை 6.00 மணிக்கு நிலைமை முழுமையாகச் சீரடைந்தது.

கிள்ளான், புக்கிட் ராஜா 2, தாமான் முத்தியாரா பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை குழாய் உடைந்ததைத் தொடர்ந்து அப்பகுதிகளில் நீர் விநியோகத் தடை ஏற்பட்டது.

அட்டவணையிடப்படாத திடீர் நீர் விநியோகத் தடையை எதிர்நோக்கியிருந்த காலத்தில் எங்களுக்கு முழு ஒத்துழைப்பை வழங்கியதோடு பொறுமையுடனும் இருந்த பயனீட்டாளர்கள் அனைவருக்கும் எங்களின் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என அந்நிறுவனம் தனது பேஸ்புக் பதிவில் கூறியது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.