MEDIA STATEMENT

இந்திய சமூகத்தின் நலன்களைக் காக்க  சிறப்புக் குழு- அமைச்சர் வ சிவகுமார் அரசிடம் பரிந்துரை

24 மார்ச் 2023, 5:55 AM
இந்திய சமூகத்தின் நலன்களைக் காக்க  சிறப்புக் குழு-  அமைச்சர் வ சிவகுமார் அரசிடம் பரிந்துரை

கோலாலம்பூர், மார் 24- இந்நாட்டில் இந்தியர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கும் அவர்கள் எதிர் நோக்கி இருக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கும் ஏதுவாக இந்தியர் விவகார சிறப்புக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் பரிந்துரை செய்திருப்பதாக  நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த இந்தியர் விவகார சிறப்புக் குழு தொடர்பான பரிந்துரையை அமைச்சர் சிவக்குமார் அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளதாகவும் அந்த பரிந்துரை தற்போது தொடக்க க்கட்ட பரிசீலனையில் உள்ளதாகவும் பிரதமர் துறை அமைச்சர் டத்தோ அர்மிஸான் முகமது அலி கூறினார்.

மக்களவையில் கேள்வி நேரத்தின் போது தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம். சரவணன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இத்தவலை வெளியிட்டார்.

இந்நாட்டிள்ள இந்தியர்களின் நலனைக் காக்க இந்தியர் விவகார சிறப்புக் குழு அமைக்கப்படுமா? என சரவணன்  கேள்வியை எழுப்பியிருந்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.