NATIONAL

பத்து பஹாட்டில் வெள்ள நிலைமை சீரடைந்து வருகிறது

22 மார்ச் 2023, 9:34 AM
பத்து பஹாட்டில் வெள்ள நிலைமை சீரடைந்து வருகிறது

ஜொகூர் பாரு, மார்ச் 22: பத்து பஹாட்டில் வெள்ள நிலைமை மீண்டு வருகிறது. இன்று காலை 8 மணிக்கு 2,540 பேர் இருந்த நிலையில், இன்று பிற்பகல் 4 மணி நிலவரப்படி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,813 ஆகக் குறைந்துள்ளது.

வெள்ளம் முழுவதுமாகக் குறைந்ததைத் தொடர்ந்து, மூன்று தற்காலிகத் தங்கும் மையங்கள் (பிபிஎஸ்) மூடப்பட்டன என மாநிலப் பேரிடர் மேலாண்மைக் குழு (JPBN) ஓர் அறிக்கையின் மூலம் தெரிவித்தது.

"தற்போது மொத்தம் 490 குடும்பங்கள் 17 பிபிஎஸ்ஸில் தங்க வைக்கப்பட்டுள்ளது, " என்று இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை எந்த ஆறும் ஆபத்தான நிலையில் இருப்பதாக பதிவு செய்யப்படவில்லை என்றும் ஜேபிபிஎன் தெரிவித்துள்ளது.

ஏழு மாவட்டங்களில் வானிலை இன்று பிற்பகல் வெயிலாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஜொகூர் பாரு, பொந்தியன் மற்றும் குளுவாங் ஆகிய இடங்களில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

– பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.