NATIONAL

ஜொகூரில் மூன்று தற்காலிகத் தங்கும் மையங்கள் (பிபிஎஸ்) மூடப்பட்டன

21 மார்ச் 2023, 3:20 AM
ஜொகூரில் மூன்று தற்காலிகத் தங்கும் மையங்கள் (பிபிஎஸ்) மூடப்பட்டன

ஜொகூர் பாரு, மார்ச் 20: மூன்று தற்காலிகத் தங்கும் மையங்கள் (பிபிஎஸ்) மூடப்பட்டதைத் தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று இரவு 8 மணி நிலவரப்படி 7,972 ஆக குறைந்துள்ளது.

"அதிக எண்ணிக்கையிலான பாதிக்கப்பட்டவர்களைக் கொண்ட மூன்று பிபிஎஸ்கள் ஸ்ரீ அமான் தேசியப் பள்ளி (552), சீனத் தேசியப் பள்ளி (எஸ்.ஜே.கே.சி) லி சுன் (522) மற்றும் பாரிட் யானி பொது மண்டபம் ஆகியவை (437) ஆகும்" என்று ஓர் அறிக்கையின் மூலம் தெரிவிக்கப்பட்டது.

பத்து பஹாட்டில் மொத்தம் மூன்று ஆறுகள் இன்னும் எச்சரிக்கை மட்டத்தில் உள்ளன. அவை சுங்கை பெக்கோக்கில் உள்ள பெக்கோக் அணை (19.12 மீட்டர்), சுங்கை செம்ப்ராங்கில் உள்ள செம்ப்ராங் அணை (11.27 மீ) மற்றும் செங்கராங்கில் உள்ள சுங்கை செங்கராங் (3.28 மீ) ஆகும்.

– பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.