NATIONAL

பத்து பஹாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,650 ஆக குறைந்துள்ளது.

20 மார்ச் 2023, 9:54 AM
பத்து பஹாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,650 ஆக குறைந்துள்ளது.

ஜொகூர் பாரு, 20 மார்ச்: மூன்று தற்காலிகத் தங்கும் மையங்கள் (பி.பி.எஸ்) மூடப்பட்டதைத் தொடர்ந்து, பத்து பஹாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்று பிற்பகல் 4 மணி நிலவரப்படி 8,650 ஆக குறைந்துள்ளது.

பத்து பஹாட்டில் உள்ள மொத்தம் மூன்று ஆறுகளும் இன்னும் எச்சரிக்கை மட்டத்தில் உள்ளன. அவை சுங்கை பெக்கோக்கில் உள்ள பெக்கோக் அணை (19.05 மீட்டர்), சுங்கை செம்ப்ராங்கில் உள்ள செம்ப்ராங் அணை (11.12 மீ) மற்றும் செங்கராங்கில் உள்ள சுங்கை செங்கராங் (3.3 மீ) ஆகும்.

இன்று ஐந்து மாவட்டங்களில் பிற்பகல் மழை பெய்யும் என்றும், கூலாய் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மூவார், மெர்சிங், கோத்தா திங்கி மற்றும் தங்காக் ஆகியவை இடங்கள் வெயிலுடன் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

– பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.