NATIONAL

கிரேன் மீது கார் மோதியதில் 3 பேர் உயிரிழப்பு

20 மார்ச் 2023, 3:49 AM
கிரேன் மீது கார் மோதியதில் 3 பேர் உயிரிழப்பு

கோலாலம்பூர், மார்ச் 20: புக்கிட் செபுதே, ஜாலான் சையத் புத்ராவில் உள்ள பள்ளி அருகே நின்று கொண்டிருந்த கிரேன் மீது நேற்று அதிகாலை கார் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர்.

ஆபரேஷன்ஸ் கமாண்டர் மூத்தத் தீயணைப்பு அதிகாரி சேகர், இச்சம்பவம் குறித்து தீயணைப்பு வீரர்களுக்கு அதிகாலை 3.46 மணி அளவில் அவசர அழைப்பு வந்ததாகவும் உடனே 10 உறுப்பினர்கள் சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்றதாகவும் தெரிவித்தார்.

சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புப் படையினர், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கிரேனின் பின்புறம் மோதிய புரோட்டான் சாகா கார் விபத்துக்குள்ளானதைக் கண்டறிந்தனர்.

"விபத்தின் விளைவாக, காரின் ஓட்டுனர் இருக்கையில் மாட்டி கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது, அதே நேரத்தில் கிரேன் காவலில் இருந்த இரண்டு பாதுகாப்பு ஊழியர்களும் கார் மோதியதில் பலத்த காயமடைந்தனர்," என்று அவர் கூறினார்.

பாதிக்கப்பட்ட மூன்று பேரும் இன்னும் அடையாளம் காணப்படவில்லை, அவர்கள் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாகச் சுகாதார ஊழியர்கள் உறுதிப்படுத்தினர்.

உயிரிழந்த மூவரின் உடல்களும் மேல் நடவடிக்கைக்காகக் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக மூத்தத் தீயணைப்பு அதிகாரி சேகர் கூறினார்.

- பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.