NATIONAL

சரவாக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

19 மார்ச் 2023, 1:05 AM
சரவாக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

கூச்சிங், மார்ச் 19: இங்குள்ள தற்காலிக தங்கும் மையத்திற்கு (பிபிஎஸ்) மாற்றப்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை மாலை 41 குடும்பங்களைச் சேர்ந்த 160 பேராக இருந்த நிலையில் நேற்று மாலை 68 குடும்பங்களைச் சேர்ந்த 241 பேராக அதிகரித்துள்ளது.

நேற்று இரவு நிலவரப்படி, இரண்டு தற்காலிக தங்கும் மையங்கள் (பிபிஎஸ்) இன்னும் செயலில் உள்ளதாகச் சரவாக் மாநிலப் பேரிடர் மேலாண்மைக் குழுவின் செயலகம் ஓர் அறிக்கையின் மூலம் தெரிவித்தது.

பிபிஎஸ் டேவான் சினார் பூடி பாருவில் 31 குடும்பங்களைச் சேர்ந்த 144 பேர் தஞ்சம் அடைந்துள்ளனர். அதே சமயம் பிபிஎஸ் டேவான் ஸ்டாபோக் பத்து கவாவில் 37 குடும்பங்களைச் சேர்ந்த 97 பேர் தங்கியுள்ளனர்.

– பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.