NATIONAL

வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் முதியவர் உயிரிழந்தார்

19 மார்ச் 2023, 1:03 AM
வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் முதியவர் உயிரிழந்தார்

குவாந்தான், மார்ச் 19: கோலா லிபிஸ், கம்போங் பாயா கெலடியில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.

லிபிஸ் மாவட்டக் காவல்துறை தலைமை கண்காணிப்பாளர் அஸ்லி முகமது நூர் கூறுகையில், இந்த சம்பவம் மாலை 5 மணியளவில் நடந்ததாக நம்பப்படுகிறது.

"தனியாக வாழ்ந்த 77 வயதான பாதிக்கப்பட்டவர் அவரது வீட்டிலிருந்து ஐந்து மீட்டர் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டார், தீ விபத்து ஏற்பட்டபோது அம்முதியவரால் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை என்று நம்பப்படுகிறது," என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

தீ விபத்துக்கான காரணம் மற்றும் சேதத்தின் அளவு இன்னும் விசாரணையில் உள்ள நிலையில், பாதிக்கப்பட்டவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கோலா லிபிஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது என்று அவர் கூறினார்.

மலேசியத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர் (செயல்பாடுகள்) பகாங் இஸ்மாயில் அப்துல் கானி கூறுகையில், அம்மர வீடு தீயில் எரிந்து நாசமானது.

– பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.