NATIONAL

இன்று காலை நிலவரப்படி ஜொகூரில் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

16 மார்ச் 2023, 7:29 AM
இன்று காலை நிலவரப்படி ஜொகூரில் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

ஜொகூர் பாரு, மார்ச் 16: ஜொகூரில் வெள்ளம் குறைந்துள்ளது. நேற்று இரவு 8 மணி நிலவரப்படி வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 33,254 பேராக இருந்த நிலையில், இன்று காலை 8 மணி நிலவரப்படி 31,680 பேராகக் குறைந்துள்ளது.

பத்து பஹாட், செகாமாட் மற்றும் மூவார் ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்னும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 8,992 குடும்பங்கள் 107 தற்காலிக தங்கும் மையங்களில் (PPS) தங்க வைக்கப்பட்டுள்ளனர் என மாநிலப் பேரிடர் மேலாண்மைக் குழு தெரிவித்தது.

மாவட்டத்தில் பல பகுதிகளில் நீர்மட்டம் குறைந்து வருவதாகவும், ரம்ஜானை முன்னிட்டு பாதிக்கப்பட்டவர்கள் பலர் தங்கள் வீடுகளை சுத்தம் செய்யத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

-பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.