NATIONAL

மாநில அரசு 1,000க்கும் மேற்பட்ட சூரியசக்தி எல்யிடி விளக்குகளை வழங்கியது

15 மார்ச் 2023, 5:59 AM
மாநில அரசு 1,000க்கும் மேற்பட்ட சூரியசக்தி எல்யிடி விளக்குகளை வழங்கியது

ஷா ஆலம், மார்ச் 15: சிலாங்கூர்  முழுவதும் உள்ள 56 தொகுதிகளுக்கும் 1,000க்கும் மேற்பட்ட  சூரியசக்தி எல்யிடி (LED) விளக்குகளை  மாநில அரசு வழங்கியுள்ளது.

தொழில்துறை எஸ்கோ டத்தோ தெங் சாங் கிம் கூறுகையில், ஒவ்வொரு பகுதிக்கும் குறிப்பாக கிராமங்கள் மற்றும் இருண்ட இடங்களில் இதுவரை குறைந்தது 20 எல்யிடி விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

" நாங்கள் இப்போதைக்கு 20 சூரியசக்தி விளக்குகள் மட்டுமே கொடுக்க முடியும் காரணம் நிதி குறைவாக உள்ளது, மேலும் சாலைகள், பள்ளங்கள் போன்ற பிற உள்கட்டமைப்புக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும்.

"இருப்பினும், நாங்கள் எப்போதும் இந்த சிக்கலை காண்கிறோம். உண்மையில், பொதுப்பணித் துறையின் (ஜே.கே.ஆர்) அதிகாரத்தின் கீழ் விளக்குகள் பொருத்தும் முக்கிய பணி உள்ளது," என்றார்.

இன்று சிலாங்கூர் மாநிலச் சட்டமன்ற அமர்வில் சேதமடைந்த சாலைகள் மற்றும் தெரு விளக்குகள் தொடர்பாக ஈஜோக் பிரதிநிதி இட்ரிஸ் அமாட் அவர்களின் கூடுதல் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

கிராமத் தெருக்கள், பூர்வீகக் குடியினர் பகுதிகள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் மேம்பாட்டு அமைச்சகத்தால் எல்யிடி விளக்குகள் நிறுவும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று சாங் கிம் கூறினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.