NATIONAL

எஸ்.பி.எம் 2022 தேர்வின் மறு அட்டவணை மார்ச் 16 முதல் 22 வரை

11 மார்ச் 2023, 2:53 AM
எஸ்.பி.எம் 2022 தேர்வின் மறு அட்டவணை மார்ச் 16 முதல் 22 வரை

கோலாலம்பூர், மார்ச் 11: எஸ்.பி.எம் (SPM) 2022 தேர்வின் மறு அட்டவணை மார்ச் 16 முதல் 22 வரை மேற்கொள்ளப்படும்.

வெள்ளத்தால் மற்றும் கோவிட் -19 யினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக எஸ்.பி.எம் மறு தேர்வு ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கல்வி அமைச்சு (கேபிஎம்) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அறிக்கையின்படி, "சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான மறு திட்டமிடல் மாநிலக் கல்வித் துறையால் (ஜேபிஎன்) நிர்வகிக்கப்படும்".

தேர்வு எழுத வேண்டிய தேதி, நேரம், குறியீடு மற்றும் தேர்வுத் தாள்கள் தொடர்பான தகவல்கள் விண்ணப்பதாரர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு மாநிலக் கல்வித் துறையின் மூலம் தெரிவிக்கப்படும்.

கூடுதல் தகவல்களுக்கு விண்ணப்பதாரர்கள் நாடு முழுவதும் உள்ள தேர்வு வாரியம் (LP) மற்றும் மாநிலக் கல்வித் துறையைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வெள்ள நிலைமை, தளவாடங்கள், தேர்வு மையத் தயார் நிலை மற்றும் தேர்வு அலுவலர்கள் நியமனம் ஆகியவற்றை அமைச்சகம் தொடர்ந்து கண்காணிக்கும்.

"அனைத்து விண்ணப்பதாரர்களும் ஆரோக்கியமான, பாதுகாப்பான மற்றும் வளமான நிலையில் தேர்வை எழுத வேண்டும் என்று கல்வி அமைச்சு பிரார்த்தனை செய்து கொள்கிறது" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

– பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.