NATIONAL

மேல்நிலைப் பள்ளி கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும்

8 மார்ச் 2023, 7:02 AM
மேல்நிலைப் பள்ளி கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும்

ஷா ஆலம், மார்ச் 8: மலேசியக் கல்வி அமைச்சகம் (கேபிஎம்) தற்போது குழந்தைகள் மேல்நிலைப் பள்ளி வரை தொடர்ந்து கல்வி கற்பதை கட்டாயமாக்க ஒரு சட்டத்தை அமல்படுத்த வேண்டிய சூழ்நிலையில் உள்ளது.

கல்வி அமைச்சர், பட்லினா சிடேக், சிறார் திருமணங்கள் காரணமாகச் சிறுவர்களின் திறனை வளர்க்கக் கூடிய கல்வியைக் கைவிடும் பிரச்சனையை எதிர்கொள்ள இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

தற்போதைய கல்விக் கொள்கையானது ஆறாம் ஆண்டு வரை மட்டுமே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் சமூகத்தில் பாலினப் பாகுபாடு உருவாகிறது என்று அவர் விளக்கினார்.

"இளம் வயதில் திருமணம் செய்து, இன்னும் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும் கல்வியைத் தொடர மலேசியக் கல்வி அமைச்சகம் இடமளிக்கும். பள்ளியில் படிக்கும் போது கர்ப்பமாக இருப்பவர்களுக்கும் இது பொருந்தும்," என்று அவர் கூறினார். சீக்கிரம் திருமணம் செய்து கொள்ளும் அவர்களின் மீது பாகுபாடு காட்ட முடியாது.

முன்னதாக, ஐக்கிய நாடுகளின் குழந்தைகளின் நிதியம் (UNICEF) பெண்களின் கல்வியை இடைநிறுத்து வதைத் தவிர்க்க குறைந்தபட்ச திருமண வயதை அதிகரிக்க வேண்டும் என்று கூறியது.

தரவுகளின்படி ஒவ்வொரு ஆண்டும் இளம் வயதிலேயே திருமணம் செய்து கொள்ளும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்தது 1,500 ஆக இருக்கும் எனத் 2022 ஆம் ஆண்டு தெரிவிக்கப்பட்டது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.