NATIONAL

அந்நியத் தொழிலாளர் தருவிப்பு  தொடர்பில் அமைச்சர் சிவகுமாருடன் இலங்கை மனித வள அமைச்சர் பேச்சு

8 மார்ச் 2023, 4:36 AM
அந்நியத் தொழிலாளர் தருவிப்பு  தொடர்பில் அமைச்சர் சிவகுமாருடன் இலங்கை மனித வள அமைச்சர் பேச்சு

கோலாலம்பூர் மார்ச் 8- மலேசியாவுக்கு வருகை புரிந்திருக்கும் இலங்கை மனித வள அமைச்சர் ஏ.பி.ஜெகத் புஷ்பா குமாரா இன்று  மனித வள அமைச்சர் வ. சிவகுமாரை அவரது அமைச்சு அலுவலகத்தில் சந்தித்து  பேச்சுவார்த்தை நடத்தினார்.

மலேசிய - இலங்கை இடையிலான இரு வழி உறவுகள் மற்றும் அந்நிய

தொழிலாளர்களைத் தருவிப்பது தொடர்பில் இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை

நடத்தப்பட்டது.

மலேசியாவில் விவசாயம், தோட்டத் தொழில் துறை, பணிப்பெண்கள் போன்ற

துறைகளில் பணிபுரிய இலங்கை தொழிலாளர்கள் தயாராக இருக்கிறார்கள்.

கடந்த காலத்தில் இலங்கை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி கொள்வதற்கு இரு நாடுகள் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டது.

அந்த வகையில் இலங்கை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி கொள்ள மலேசிய முன் வர வேண்டும் என்று இலங்கை மனித வள அமைச்சர் ஜெகத் புஷ்பா குமாரா கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.