ANTARABANGSA

துருக்கியில் திங்களன்று மீண்டும் பூகம்பம்- இருவர் பலி, 140 பேர் காயம்

1 மார்ச் 2023, 4:45 AM
துருக்கியில் திங்களன்று மீண்டும் பூகம்பம்- இருவர் பலி, 140 பேர் காயம்

அங்காரா, மார்ச் 1- தென்கிழக்கு துருக்கியில் உள்ள மாலத்யா மாநிலத்தில் ரிக்டர்

அளவில் 5.6 எனப் பதிவான நிலநடுக்கத்தில் 2 பேர் உயிரிழந்ததோடு 140 பேர்

காயமடைந்ததாகத் துருக்கியின் பேரிடர் மற்றும் அவசர மேலாண்மை நிறுவனம் நேற்று தெரிவித்தது.

பாதிக்கப்பட்ட 40 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 12 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக அந்நிறுவனம் ஓர் அறிக்கையில் தெரிவித்தது.

இந்த நிலநடுக்கம் யெசிலியூர்ட் மாவட்டத்தில் 6.96 கிலோமீட்டர் ஆழத்தில்

மையமிட்டிருந்தது.

கடந்த பிப்ரவரி 6ஆம் தேதியன்று ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கத்தில்  44,000க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததோடு லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர்.

இந்தப்  பேரழிவால் பாதிக்கப்பட்ட துருக்கியிலுள்ள 10 பிராந்தியங்களில் மாலத்யா

பகுதியும் ஒன்றாகும்.

வகைantarabangsa

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.