சிலாங்கூர் மாநிலத்தில் கடந்தாண்டின் அந்நிய முதலீட்டு மதிப்பு 1,200 கோடி வெள்ளி

18 பிப்ரவரி 2023, 4:49 AM
சிலாங்கூர் மாநிலத்தில் கடந்தாண்டின் அந்நிய முதலீட்டு மதிப்பு 1,200 கோடி வெள்ளி

பந்திங், பிப் 18- சிலாங்கூர் மாநிலத்தின் கடந்தாண்டிற்கான அந்நிய முதலீட்டின் மதிப்பு 1,200 கோடி வெள்ளியை எட்டும் என மதிப்பிடப்படுகிறது. ஏற்கனவே இலக்கு நிர்ணயிக்கப்பட்ட 1,000 கோடி வெள்ளியை விட இது அதிகமாகும்.

மாநில அரசு நிர்ணயித்த முதலீட்டு மதிப்பை கடந்தாண்டு செப்டம்பர் மாதமே அடையப் பெற்ற விட்டதாக முதலீடு, தொழிலியல் மற்றும் சிறு,நடுத்தர தொழில் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் கூறினார்.

இதன் அடிப்படையில் கடந்தாண்டு மாநிலத்திற்கு கிடைத்த மொத்த அந்நிய முதலீடுகள் தொடர்பான தரவுகளை தமது தரப்பு சேகரித்து வருவதாக கூறிய அவர், அதன் பின்னரே இவ்வாண்டிற்கான முதலீட்டு இலக்கு நிர்ணயிக்கப்படும் என்றார்.

இவ்வாண்டில் நிறைய சவால்களை எதிர்நோக்க வேண்டி வரும் என எதிர்பார்க்கிறோம். காரணம், மேம்பாட்டைப் பொறுத்த வரை நாடு “குளிர் காலத்தில்“ நுழையும் என பல பொருளாதார நிபுணர்கள் கருத்துரைக்கின்றனர். எனினும் வெளியிலிருந்து வரும் கருத்தாகும். உள்ளே நிலைமை வேறு மாதிரியாக உள்ளது என அவர் தெரிவித்தார்.

உலகம் முழுமைக்குமான புவி அரசியல் மேம்பாட்டைப் பார்த்தால் அமெரிக்காவின் வட்டி விகிதத்தில் நிலையற்றப் போக்கு நிலவுவதை காண முடியும். நிச்சயமாக இது நமக்கு சுமையைத் தரும் என்று அவர் மேலும் சொன்னார்.

நேற்று இங்கு கோம்பாஸ் கோத்தா ஸ்ரீ லங்காட் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டப் பின்னர் பெர்னாமாவிடம் அவர் இதனைக் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.