2025ஆம் ஆண்டுவாக்கில் 65,000 வீடுகளை கட்ட சிலாங்கூர் அரசு இலக்கு

17 பிப்ரவரி 2023, 7:30 AM
2025ஆம் ஆண்டுவாக்கில் 65,000 வீடுகளை கட்ட சிலாங்கூர் அரசு இலக்கு

கோலாலம்பூர், பிப் 17- சிலாங்கூர் கூ 3.0 இலக்கின் வாயிலாக வரும் 2025ஆம் ஆண்டுவாக்கில் 60,000 வீடுகளைக் கட்ட சிலாங்கூர் அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. 

இவ்வாண்டு பிப்ரவரி 1ஆம் தேதி வரை சந்தையில் 50,036 வீடுகள் தயாரான நிலையில் வீடுகளை வாங்குவதற்கு 83,603 விண்ணப்பங்கள் கிடைக்கப பெற்றதாக வீடமைப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸமாயில் கூறினார்.

சிலாங்கூர் மாநில மக்களிடையே கட்டுப்படி விலை வீடுகளுக்கான அடையாளச் சின்னமாக சிலாங்கூர் கூ வீடுகள் விளங்குவதாக கூறிய அவர், இதனால் தயாராகும் வீடுகளைக் காட்டிலும் அவற்றுக்கான விண்ணப்பங்கள் அதிகமாக உள்ளன எனக் குறிப்பிட்டார்.

அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய சொந்த வீட்டைக் கொண்டிருக்க வேண்டும் என ஒவ்வொரு குடும்பத்தின் கனவை நனவாக்குவதற்கு ஏதுவாக 60,000 வீடுகளை நிர்மாணிக்கும் இலக்கை அடைய முடியும் என்று மாநில அரசும் சிலாங்கூர் மாநில வீடமைப்பு மற்றும் சொத்துடைமை மேம்பாட்டு வாரியமும் நம்புகின்றன என்று அவர் மேலும் சொன்னார்.

ரூமா சிலாங்கூர் கூ திட்டத்தின் வாயிலாக இவ்வாண்டில் 7,500 வீடுகளை நிர்மாணிக்கும் இலக்கை அடைய முடியும் என தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

வீடமைப்புத் துறையில் தொடர்ந்து பயன்படுத்துவதற்கு ஏதுவாக சிலாங்கூர் கூ வீடமைப்புக் கொள்கை 3.0 சில சீர்திருத்தங்களுக்கு உட்படுத்தப்படவுள்ளதாக இங்குள்ள புல்மென் ஹோட்டலில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.