ANTARABANGSA

நிலநடுக்கம் ஏற்பட்ட 198 மணி நேரத்திற்குப் பிறகு இரண்டு பேர் மீட்கப்பட்டுள்ளனர்

15 பிப்ரவரி 2023, 3:20 AM
நிலநடுக்கம் ஏற்பட்ட 198 மணி நேரத்திற்குப் பிறகு இரண்டு பேர் மீட்கப்பட்டுள்ளனர்

அங்காரா, பிப் 14: நாட்டின் தென்கிழக்கில் நிலநடுக்கம் ஏற்பட்ட 198 மணி நேரத்திற்குப் பிறகு இரண்டு பேர் இடிபாடுகளில் இருந்து மீட்கப் பட்டதாகத் துருக்கி ஊடகத்தை மேற்கோள் காட்டி ஸ்புட்னிக் செய்தி வெளியிட்டுள்ளது.

ஒளிபரப்பாளரான டிஆர்டி ஹேபரின் கூற்றுப்படி, அவ்விருவரும் கஹ்ராமன்மாராஸ் இடத்திலிருந்து மீட்கப்பட்டனர்.

நிலநடுக்கத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை துருக்கியில் 31,500யைத் தாண்டியுள்ள நிலையில் உலக சுகாதார அமைப்பு சிரியாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 8,500 எனத் தெரிவித்துள்ளது.

மேலும், சிரியா சுகாதார அமைச்சகம், அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,410 பேரைத் தாண்டியுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது.

- பெர்னாமா

வகைantarabangsa

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.