ஷா ஆலம், பிப் 12- பந்திங், புக்கிட் சாங்காங், கம்போங் லபோஹான் டாகாங்கில் உள்ள லங்காட் ஆற்றில் ஆடவரின் சடலம் நேற்று மிதக்க கண்டுக் கண்டு பிடிக்கப்பட்டது.அந்த சடலம் கண்டு பிடிக்கப்பட்டது தொடர்பில் நேற்று மதியம் 12.15 மணியளவில்
தங்களுக்கு தகவல் கிடைத்ததாக கோல லங்காட் மாவட்ட காவல்துறைத் தலைவர் சூப்ரிண்டெண்டன் அகமது ரிட்வான் முகமட் நோர் @ சலே கூறினார்.
நீரில் மூழ்கிய நபர் கோல சிலாங்கூரைச் சேர்ந்த 28 வயது லாரி ஓட்டுநர் என்று விசாரணையில் கண்டறியப்பட்டதாக அவர் சொன்னார்.
முழு ஆடை அணிந்த நிலையில் நீரில் மிதந்த அச்சடலத்தைக் மீன் பிடித்துக் கொண்டிருந்த பூர்வக்குடி ஆடவர் கண்டு, போலீசுக்கு தகவல் கொடுத்ததாக அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவரின் உடலைப் பரிசோதித்ததில் காயங்கள் ஏதும் இல்லை என்றும், இறந்தவரிடம் சில அடையாள ஆவணங்கள் கிடைத்ததாகவும் அகமது ரிட்வான் கூறினார்.
உடல் பிரேத பரிசோதனைக்காக பந்திங் மருத்துவமனை தடயவியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டதாகவும், இந்த சம்பவம் திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.
MEDIA STATEMENT
சுங்கை லங்காட் ஆற்றில் ஆடவரின் சடலம் கண்டுபிடிப்பு
12 பிப்ரவரி 2023, 11:54 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
மக்கள் தொகை அடர்த்தியான பகுதிகளில் குற்றப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும்.
n.pakiya
29 ஜூலை 2025

selangor
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
n.pakiya
29 ஜூலை 2025

national
இஸ்தானா நெகாராவில் இன்று தலைமை நீதிபதி பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
n.pakiya
29 ஜூலை 2025

national
மலேசியர்களுக்கு வெ.1.99 விலையில் ரோன் 95 விற்பனை- அந்நியர்களுக்கு சந்தைக்கேற்ப விலை நிர்ணயம்
n.pakiya
27 ஜூலை 2025

உங்கள் கருத்து என்ன?



