MEDIA STATEMENT

சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவராக ஹூசேன் ஓமார் கான் நியமனம்

10 பிப்ரவரி 2023, 2:52 AM
சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவராக ஹூசேன் ஓமார் கான் நியமனம்

கோலாலம்பூர், பிப் 10- புக்கிட் அமான் குற்றப் புலனாய்வு துறையின் உளவு மற்றும் நடவடிக்கைப் பிரிவு துணை இயக்குநர் டத்தோ ஹூசேன் ஓமார் கான் சிலாங்கூர் மாநில புதிய போலீஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

போலீஸ் கமிஷனர் (சி.பி.) என்ற அந்தஸ்துடன் வரும் மார்ச் மாதம் 13ஆம் தேதி ஹூசேன் இந்த பதவியை ஏற்பார் என்று அரச மலேசிய போலீஸ் படையின் (பி.டி.ஆர்.எம்.) செயலாளர் டத்தோ நோர்ஷியா சாடுடின் கூறினார்.

சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவராக பொறுப்பு வகித்து வந்த டத்தோ அர்ஜூனைடி முகமது கடந்த ஜனவரி 2ஆம் தேதி பதவி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து மாநில துணை போலீஸ் தலைவரான டத்தோ எஸ். சசிகலா தேவி மாநில இடைக்கால போலீஸ் தலைவராக நியமிக்கப்பட்டார்.

அரச மலேசிய போலீஸ் படையில் 35 ஆண்டுகால அனுபவம் வாய்ந்த அர்ஜூனைடி கெடா, பெர்லிஸ், கிளந்தான், கோலாலம்பூர், பேராக் மற்றும் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் மற்றும் சிலாங்கூர் உள்ளிட்ட ஏழு மாநில போலீஸ் தலைமையகங்களில் பணியாற்றியுள்ளார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.