MEDIA STATEMENT

விரைவு பேருந்து கவிழ்ந்ததில் 16 பேர் காயம்- பட்டர்வெர்த்தில் சம்பவம்

6 பிப்ரவரி 2023, 4:48 AM
விரைவு பேருந்து கவிழ்ந்ததில் 16 பேர் காயம்- பட்டர்வெர்த்தில் சம்பவம்

பட்டர்வெர்த், பிப் 6- விரைவு பஸ் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் அதன் ஓட்டுநர் உள்பட 16 பேர் இலேசான  காயங்களுக்குள்ளாயினர். இச்ச்சம்பவம் பட்டர்வெர்த் வெளி சுற்றுச்சாலையின் 5.5வது கிலோ மீட்டரில் இன்று அதிகாலை 4.20 மணிக்கு நிகழந்தது.

இந்த விபத்தில் பஸ்சின் ஓட்டுநர் உள்பட 16 பேர் லேசான காயங்களுக்குள்ளானதாக பினாங்கு மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் முகமது ஃபைசோல் ஜைனுடின் கூறினார்.

தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு தாங்கள் விரைந்த போது பஸ் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து கிடைப்பதைக் கண்டதாக அவர் சொன்னார்.

உடனடியாக நாங்கள் விரைந்து செயல்பட்டு அந்த பஸ்சிலிருந்த ஓட்டுநர் உள்பட 16 பேரையும் மீட்டோம். ஆறு ஆண்கள் மற்றும் 10 பெண்களை உள்ளடக்கிய அந்த பயணிகளுக்கு லோசன காயங்கள் ஏற்பட்டிருந்தன.

சம்பவ இடத்திலிருந்த சுகாதார அமைச்சின் குழுவினர் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தப் பின்னர் மேல் சிகிச்சைக்காக செபராங் பிறை மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர் என்றார் அவர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.