MEDIA STATEMENT

ஜெராம் படகுத் துறை அருகே ஆடவர்  சடலம் கண்டுபிடிப்பு

6 பிப்ரவரி 2023, 4:00 AM
ஜெராம் படகுத் துறை அருகே ஆடவர்  சடலம் கண்டுபிடிப்பு

கோல சிலாங்கூர்,  பிப் 6- இங்குள்ள ஜெராம், சுங்கை பூலோ சசாரான் பாலம் அருகே உள்ள பாகான் முவாரா எஸ்பி படகுத் துறையிலிருந்து 500 மீட்டர் தொலைவில் ஆடவர் ஒருவரின் சடலம் நீரில் மிதக்கக் காணப்பட்டது.

அடையாளம் தெரியாத அந்த ஆடவரின் சடலத்தைக் கண்ட  பொதுமக்கள் நேற்று காலை 8.05 மணியளவில் காவல் துறைக்கு தகவல் கொடுத்ததாக கோல சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் ரம்லி காசா கூறினார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் கலை 9.45 மணியளவில் அச்சடலத்தை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தாக நேற்று இங்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

சவப்பரிசோதனைக்காக அச்சடலம் தஞ்சோங் காராங் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாக அவர் மேலும் சொன்னார்.

இச்சம்பவம் திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளதோடு இதன் தொடர்பான விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் அந்த படகுத் துறை அருகே மேற்கொள்ளப்பட்ட ஓப்ஸ் தாப்பிஸ் நடவடிக்கைக்கும் இந்த சடலம் கண்டு பிடிக்கப் பட்டதற்கும் தொடர்பு இருக்கும் சாத்தியம் உள்ளதாக அவர் மேலும் சொன்னார்.

அந்த படகுத் துறையை போலீசார் அணுகிய போது அடையாளம் தெரியாத கும்பல் ஆற்றில் குதித்து மறு கரை நோக்கி நீந்திச் செல்ல முயன்றதாக அவர் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.