ஷா ஆலம் மாநகராட்சி மன்றம் (எம்பிஎஸ்ஏ) சனி, ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் மதிப்பீட்டு வரி செலுத்தும் கவுண்டர்களைத் திறக்கும்

2 பிப்ரவரி 2023, 4:04 AM
ஷா ஆலம் மாநகராட்சி மன்றம் (எம்பிஎஸ்ஏ) சனி, ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் மதிப்பீட்டு வரி செலுத்தும் கவுண்டர்களைத் திறக்கும்

ஷா ஆலம், பிப்ரவரி 2: ஷா ஆலம் மாநகராட்சி மன்றம் (எம்பிஎஸ்ஏ) பிப்ரவரி முழுவதும் சனி, ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் மதிப்பீட்டு வரி செலுத்தும் கவுண்டர்களை திறக்கும்.

கார்ப்பரேட் மற்றும் பப்ளிக் ரிலேஷன்ஸ் பிரிவின் தலைவர் கூறுகையில், கவுண்டரைத் திறப்பது வழி வார இறுதி நாட்களில் சொத்து உரிமையாளர்களுக்கு பணம் செலுத்துவதற்கும் மாநகராட்சி மன்றத்தை அணுகுவதற்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

"விஸ்மா ஷா ஆலம் மாநகராட்சி மன்ற அலுவலகத்தில் அதை மையப்படுத்திய சுங்கை பூலோ, கோத்தா கெமுனிங் மற்றும் செத்திய ஆலம் ஆகிய மூன்று கிளை அலுவலகங்களிலும் பணம் செலுத்தலாம்.

"கவுண்டர் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை திறந்திருக்கும்" என்று ஷாரின் அகமது கூறினார்.

இந்த கட்டணக் கவுண்டரைத் திறப்பது தொடர்பான ஏதேனும் கேள்விகளுக்கு எம்பிஎஸ்ஏ கவுண்டரை 03-5510 5133 நீட்டிப்பு 1657, 1203, 1656, 1295, 1531 மற்றும் 1522 என்ற எண்ணிகளில் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.