செந்தோசா (N.48) இல் பொங்கல் விழா

26 ஜனவரி 2023, 3:32 AM
செந்தோசா (N.48) இல் பொங்கல் விழா

கோலாலம்பூர், ஜன 26: எதிர்வரும் 29/1/2022 ஞாயிற்றுக்கிழமை அன்று செந்தோசா சட்டமன்ற தொகுதி (N.48) யில் உள்ள சமூகச் சேவை மையத்தில் பொங்கல் விழா நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் கலந்து கொள்ள அத் தொகுதி  சட்டமன்ற  உறுப்பினரும்,  மந்திரி புசாரின்  மக்கள் தொடர்பு  சிறப்பு அதிகாரியுமான  மாண்புமிகு டாக்டர். குணராஜ் ஜோர்ஜ் பொதுமக்களை அழைக்கிறார்..

அனைத்து இனத்தவர்களும் ஒரே குடும்பமாக, ஒன்றாக வாழவும், ஒருவரை ஒருவர் நேசிக்கவும், உதவும் மனப்பான்மையை வளர்க்கவும், உள்ளூர் மக்களிடையே நட்புறவை ஏற்படுத்தவும் இது போன்ற நிகழ்ச்சிகள் உதவுகின்றன. மேலும், இதன் வழி அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிடையே நல் உறவையும் வளர்க்க முடியும்.

இந்த அழைப்பை ஏற்று பொதுமக்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு அதை வெற்றியடையச் செய்வர் என்று பெரிதும் எதிர்பார்க்க படுகிறது. பொது மக்களின் வருகை இந்நிகழ்வை மேலும் வண்ணமயமாக்கும் என்பதில் ஐயமில்லை.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.