MEDIA STATEMENT

சிலாங்கூர் சுல்தான், தெங்கு பெரமைசூரி சீனப் புத்தாண்டு வாழ்த்து

21 ஜனவரி 2023, 11:22 AM
சிலாங்கூர் சுல்தான், தெங்கு பெரமைசூரி சீனப் புத்தாண்டு வாழ்த்து

ஷா ஆலம், ஜன 21- மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் மற்றும் தெங்கு பெர்மைசூரி சிலாங்கூர் மாநில மக்களுக்கு சீனப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

மலேசியாவில் இனங்களுக்கிடையில் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதில் இந்த வகையான கொண்டாட்டம் மிக முக்கியமான அங்கமாகத் தொடரும் என்று தாங்கள் நம்புவதாக சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் மற்றும் தெங்கு பெர்மைசூரி நோராஷிகின் தம்பதியர் கூறினர்.

சகிப்புத்தன்மை மற்றும் பரஸ்பர மரியாதை நிறைந்த நல்லெண்ண சூழ்நிலையில் இந்த விழா கொண்டாடப்படுகிறது.

இந்தப் புத்தாண்டு நம் அனைவருக்கும் செழிப்பு, மேன்மை மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டுவரும் என்று நம்புகிறோம் என்று சிலாங்கூர் அரச அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வழங்கிய சீனப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் சுல்தான்  தெரிவித்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.