ANTARABANGSA

சமூக நல இல்லங்களுக்கு ஆயர் சிலாங்கூர் நிறுவனம் பொருளுதவி

21 ஜனவரி 2023, 4:25 AM
சமூக நல இல்லங்களுக்கு ஆயர் சிலாங்கூர் நிறுவனம் பொருளுதவி

ஷா ஆலம், ஜன 21- சீனப்புத்தாண்டை முன்னிட்டு ஆயர் சிலாங்கூர் சென். பெர்ஹாட் நிறுவனம் கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள மூன்று சமூக நல இல்லங்களுக்கு அத்தியாவசியப்  பொருள்களை வழங்கியது.

பெட்டாலிங் ஜெயா, கெனாங் பூடி மூத்த குடிமக்கள் நல இல்லம், தாமான் வங்சா பெர்மாய், செஸ்டர் சமூக நல இல்லம், செராஸ், பெலாங்கி சமூக நல பராமரிப்பு மையம் ஆகியவையே உதவி பெற்ற அந்த மூன்று சமூக நல இல்லங்களாகும்.

இந்த சமூக நல இல்லங்களில் தங்கியுள்ளவர்களுக்கு உதவிப் பொருள்களை வழங்கியது தவிர்த்து பெலாங்கி சமூக  நல பராமரிப்பு இல்லத்தில் உள்ள சிறார்களுக்கு பள்ளி உபகரணங்கள், உடைகள் மற்றும் அங் பாவ் வழங்கினோம் என அந்நிறுவனம் தெரிவித்தது.

இது தவிர அந்த இல்லங்களில் குடியிருப்பவர்களின் வசதிக்காக அங்குள்ள குழாய்களை சோதித்து பழுதுகளை சீரமைக்கும் பணியையும் தாங்கள் மேற்கொண்டதாக அது தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டது.

இந்த உதவி நடவடிக்கைள் ஆயர் சிலாங்கூர் சிலாங்கூர் நிறுவனத்தின் இணைந்து முன்னேறுவோம் எனும் நிறுவன சமூக கடப்பாட்டுத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப் பட்டதாகவும் அது கூறியது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.