MEDIA STATEMENT

திரங்கானு சுல்தானுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு

12 ஜனவரி 2023, 7:53 AM
திரங்கானு சுல்தானுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு

கோல திரங்கானு, ஜன 12- மேன்மை தங்கிய திரங்கானு சுல்தான் சுல்தான் மிஸான் ஜைனால் அபிடினை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று இஸ்தானா ஷர்ஹியாவில் சந்தித்தார்.

அன்வார் பயணம் செய்த வாகனம் காலை 10.27 மணியளவில் அரண்மனை வளாகத்தில் நுழைந்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் அவ்வாகனம் அங்கிருந்து வெளியேறியது.

பக்கத்தான் ஹராப்பான் தலைவரும் தம்புன் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ அன்வார் நாட்டின் பத்தாவது பிரதமராக கடந்தாண்டு நவம்பர் 24ஆம் தேதி பதவியேற்றப் பிறகு சுல்தான் மிஸானுடன் நடத்தும் முதல் சந்திப்பு இதுவாகும்.

சுல்தானுடனான சந்திப்புக்குப் பிறகு மலேசிய திரங்கானு பல்கலைக்கழகத்தின் செனட் மண்டபத்தில் மாநிலத்திலுள்ள கூட்டரசு துறைகளின் தலைவர்களுடன் அன்வார் சந்திப்பு நடத்தவுள்ளார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.