MEDIA STATEMENT

இணையம் வழி மதிப்பீட்டு வரியைச் செலுத்துவோருக்கு வரிச் சலுகை- எம்.பி.எச்.எஸ் அறிவிப்பு

7 ஜனவரி 2023, 12:26 PM
இணையம் வழி மதிப்பீட்டு வரியைச் செலுத்துவோருக்கு வரிச் சலுகை- எம்.பி.எச்.எஸ் அறிவிப்பு

ஷா ஆலம், ஜன 7- இணையம் வாயிலாக  சொத்து மதிப்பீட்டு வரியைச் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு வரிக் கழிவு வழங்க உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகம் முன்வந்துள்ளது.

இம்மாதம் முதல் தேதி தொடங்கி ஏப்ரல் 30ஆம் தேதி வரை இந்த சலுகை அமலில் இருக்கும் என்று நகராண்மைக் கழகம் தனது பேஸ்புக் பதிவில் கூறியது.

இணையம் வாயிலாக மதிப்பீட்டு வரியைச் செலுத்துவோருக்கு ஆறு மாத காலத்திற்கு 3.00 வெள்ளியும் ஒரு வருட காலத்திற்கு 8.00 வெள்ளியும் கழிவு வழங்கப்படும்.

அதன் தொடர்பான மேல் விவரங்களை 03-60641331 இணைப்பு 135/151 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

வாடிக்கையாளர்கள் தங்களின் மதிப்பீட்டு வரியை https://mphs.gov.my  எனும் அகப்பக்கம் வாயிலாக ஓராண்டிற்கான தொகையை முழுமையாக அல்லது இரு தவணைகளாக செலுத்தலாம்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.