MEDIA STATEMENT

மக்களே துரோகிகளைத் தூக்கியெறிந்து விட்டனர்

20 டிசம்பர் 2022, 9:22 AM
மக்களே துரோகிகளைத் தூக்கியெறிந்து விட்டனர்

கோலாலம்பூர் டிசம்பர் 20 ;- இன்று முதல் 15 வது தவணையாக நாடாளுமன்றத்தில் மக்களவை கூட்டத்தொடர் நடைபெறுகிறது.

கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் மலேசிய அரசியலில்  உத்தமர்களைப் போல் வலம் வந்த அரசியல் துரோகிகளின் ஆட்டத்திற்கு, ஏற்றிவிட்ட  தொகுதி மக்களே  முடிவு கட்டிவிட்டனர். குறிப்பாக மக்கள் நீதி கட்சியின் வழி மலேசிய அரசியல் வானில் நாட்டு மக்களால் பெரிதும் மதிக்கப் பட்ட டத்தோ ஸ்ரீ அஸ்மின் அலி, சுரைடா கமருடின் ஆகியோர்  இப்பொழுது  செல்லாகாசாக்கப்பட்டனர்.

இவர்களில்  அம்பாங் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த  சுரைடா கமருடின் இத்தேர்தலில் வைப்பு தொகையை  இழந்தார்.  இன்னொருவர்  பெரிய போராட்டத்திற்கு பின்  பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் படு தோல்வியை தழுவினார் அஸ்மின் அலி. இந்த 2 துரோகிகளுக்கும் தொகுதி மக்கள் சிறப்பாக பாடம் புகுத்தினர். அவர்கள் தொகுதி மக்களுக்கு சபாஸ்.

கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் மக்கள் நீதிக் கட்சியின் வழி மக்களவை உறுப்பினராக வலம் வந்த  இந்த அரசியல் துரோகிகள் அடுத்து வரும் இளைய தலைமுறைக்கு நல்ல படமாக ஆகி விட்டனர். கையில் காசு உண்டு  அரசியல்  பலமுண்டு என்ற இறுமாப்பு கொண்டவர்களுக்கு இவர்களே சிறந்த பாடம்.

அதர்மத்திற்கு முன்னாள் தர்மம் தோற்பது போல் தெரியும். ஆனால் இறுதியில் தர்மமே வெல்லும் என்ற  உலக நீதி என்றும் நிலைத்திருக்கும்

எழுத்து சு.சுப்பையா.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.