ஷா ஆலம், டிச 19- மாநிலத்தின் மூன்று தொகுதிகளில் சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் (பி.கே.பி.எஸ்.) ஏசான் ராக்யாட் மலிவு விற்பனை இன்று நடைபெறுகிறது.பங்சாபுரி ஸ்ரீ பெகோனியா, பண்டார் புத்ரி பூச்சோங் (கின்ராரா தொகுதி), ஜாலான் செங்கே, தாமான் பாயு இமாஸ், போர்ட் கிள்ளான் (பண்டமாரான் தொகுதி), பங்சாபுரி ஸ்ரீ மெராந்தி பண்டார் ஸ்ரீ டாமன்சாரா, சூராவ் உக்வா கார் நிறுத்துமிடம் (புக்கிட் லஞ்சான் தொகுதி) ஆகிய இடங்களில் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை இந்த மலிவு விற்பனை நடைபெறும்.
இந்த விற்பனையில் தலா 10.00 வெள்ளி விலையில் 500 கோழிகளும் ஒரு தட்டு 10.00 வெள்ளி என்ற விலையில் 300 தட்டு முட்டைகளும் தலா 10.00 வெள்ளி விலையில் 300 பேக் இறைச்சியும் விற்பனைக்கு வைக்கப்படும்.
இவை தவிர, 300 பாக்கெட் கெம்போங் மீன்(வெ.6.00), பத்து வெள்ளி விலையில் 300 பேக் அரிசி, 150 போத்தல் 5 கிலோ சமையல் எண்ணெய் (வெ.25.00) ஆகிய அத்தியாவசிய உணவுப் பொருட்களும் இங்கு விற்கப்படும்.
இவற்றோடு ஏசான் பி.கே.பி.எஸ். தயாரிப்புகளான கோதுமை மாவு, மிளகாய் சாந்து, சார்டின், பிஸ்கட், மீ உள்ளிட்ட பொருட்களும் மலிவான விலையில் விற்கப்படுகிறது.
மாநில அரசின் இந்த மலிவு விற்பனை தொடர்பான விபரங்களை linktr.ee/myPKPS என்ற அகப்பக்கம் வழி அறிந்து கொள்ளலாம்.
ACTIVITIES AND ADS
மூன்று தொகுதிகளில் இன்று மாநில அரசின் மலிவு விற்பனை
19 டிசம்பர் 2022, 2:08 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
economy
சிஜங்காங், உலு கிளாங், செந்தோசா ஆகிய மூன்று இடங்களில் இன்று மலிவு விற்பனை
n.pakiya
14 பிப்ரவரி 2024

selangor
உள்ளூராட்சி மன்றங்களின் செலவுகள் அதிகரிப்பு: மதிப்பீட்டு வரி உயர்த்தப்படாது என சிலாங்கூர் உறுதி
Shalini Rajamogun
29 ஏப்ரல் 2026

alam-sekitar & cuaca
'துருன் அன்வர்' போராட்டக்காரர்கள் கோலாலம்பூர் வீதிகளில் 20 டன் குப்பையை விட்டுச் சென்றார்கள்! ஙா கோர் மிங்
n.pakiya
28 ஜூலை 2025

activities-and ads
இந்து ஆலயங்கள் எதிர்நோக்கும் நிலப் பிரச்சனைக்கு தீர்வு காண -ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பா ராய்டு முயற்சி
n.pakiya
15 பிப்ரவரி 2024

வகைpbt
உங்கள் கருத்து என்ன?



