SUKANKINI

இன்று மலேசியக் கிண்ண இறுதியாட்டம்- கிண்ணத்தை வெல்ல சிலாங்கூர் குழுவுக்கு மந்திரி புசார் வாழ்த்து

26 நவம்பர் 2022, 9:26 AM
இன்று மலேசியக் கிண்ண இறுதியாட்டம்- கிண்ணத்தை வெல்ல சிலாங்கூர் குழுவுக்கு மந்திரி புசார் வாழ்த்து

ஷா ஆலம், நவ 26- இன்றிரவு நடைபெறும் மலேசியக் கிண்ண

இறுதியாட்டத்தில் வெற்றி வாகை சூட சிலாங்கூர் எப்.சி. குழுவுக்கு மந்திரி

புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி வாழத்துக்களைத் தெரிவித்துக்

கொண்டுள்ளார்.

சிலாங்கூர் எப்.சி. குழு பலம் பொருந்திய ஜோகூர் டாருள் தாக்சிம்

குழுவை ( ஜே.டி.டி.) இன்றிரவு புக்கிட் ஜாலில் தேசிய அரங்கில்

சந்திக்கவிருக்கிறது.

முப்பத்து நான்கு ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட அந்த மலேசிய

கிண்ணத்தைக் கடந்த 2015ஆம் ஆண்டிற்குப் பிறகு சிலாங்கூர் இம்முறை

மீண்டும் கைப்பற்றும் என தாம் பெரிதும் எதிர்பார்ப்பதாக டத்தோஸ்ரீ

அமிருடின் ஷாரி கூறினார்.

மலேசியக் கிண்ணப் போட்டியின் இறுதியாட்டத்தில் களம் காணவிருக்கும்

சிவப்பு மஞ்சள் சிலாங்கூர் எப்.சி. வெற்றியடைய வாழ்த்துகிறேன் என்று

அவர் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.

முப்பத்து நான்காவது மலேசிய கிண்ணத்தைச் சிலாங்கூர் அணியினர்

மாநிலத்திற்குக் கொண்டு வர மாநில மக்கள் அனைவரும்

பிரார்த்திக்கின்றனர் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

கடந்த 2015ஆம் ஆண்டில் ஆகக் கடைசியாக மலேசிய கிண்ணத்க்ச்

சிலாங்கூர் கைப்பற்றியது. அவ்வாட்டத்தில் சிலாங்கூர் குழு கெடாவை 2-0

என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.

வகைsukankini

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.