துரோகிகளுடன் இணைவதை விட எதிரிகளுடன் வேலை செய்வது மேல்

22 நவம்பர் 2022, 3:10 AM
துரோகிகளுடன் இணைவதை விட எதிரிகளுடன் வேலை செய்வது மேல்
துரோகிகளுடன் இணைவதை விட எதிரிகளுடன் வேலை செய்வது மேல்
துரோகிகளுடன் இணைவதை விட எதிரிகளுடன் வேலை செய்வது மேல்
துரோகிகளுடன் இணைவதை விட எதிரிகளுடன் வேலை செய்வது மேல்

சுங்கை பூலோ.நவ. 21- பக்காத்தான் ஹராப்பான் முடிந்த 15வது பொதுத் தேர்தலில் பெற்ற இடங்கள் ஆட்சியமைக்க போதுமானதாக இல்லாத நிலையில், பாரிசான் நேஷனலுடன்  அது ஏற்படுத்தியிருக்கும் உறவு நாட்டுக்கும் மக்களுக்கும் பயனுள்ளதாக  இருக்கும் என பலர் கருத்து சொல்லி வருகின்றனர், இந்தியர்கள் பலர் துரோகியின் கூட்டுறவை விட  எதிரியுடன் கூட்டு வைப்பதை வரவேற்று கருத்து கூறுகின்றனர், வரவேற்றுள்ளனர்.

துரோகிகளுடன் இணைவதை விட எதிரிகளுடன் இணைந்து நாட்டின் எதிர்காலத்தை முன் நிறுத்தி செயல் படுவதே மேல் என்று சிலாங்கூர் இன்று மேற்கொண்ட கள ஆய்வில் தெரிய வந்துள்ளது.

டமன்சாரா கம்போங் காயூ ஆரா வட்டாரத்தில் நன்கு அறிமுகமான நாதன் இராமலிங்கம், நாட்டின் எதிர் கால நலனை முன் வைத்து எதிரிகளோடு இணைந்து செயல்படுவது மேல் சிறப்பானது. துரோகிகளுடன் இணைந்தால் எப்ப வேண்டுமானாலும் முதுகில் குத்துவார்கள். துரோகிகளுடன் சமரசம் செய்வது சிறப்பாகாது. எதிரிகள் நமது கண்ணாடி போல் நமது நடவடிக்கை பிரதிபலிப்பவர்கள்.  துரோகிகளுடன் பயணித்தால் நமது இலக்கை நாம் அடையவே முடியாது. ஆகவே எதிரிகளான தேசிய முன்னணியுடன் இணைந்து வேலை செய்வது மேல் என்று நாதன் கூறினார்.

மலாக்காவை சேர்ந்த ஜெகநாதன்  ஜாசின் வட்டாரத்தை சேர்ந்தவர். முகிடின் யாசின் துரோகம் செய்தவர் நம்பிக்கை கூட்டணியின் ஆட்சியோடு இணைந்து பின்னர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முதுகில் குத்தி ஆட்சி கவிழ்ப்பு செய்தார். அவரோடு  மீண்டும் இணைந்து வேலை செய்வதை விட எதிரிகளான தேசிய முன்னணியோடு நாட்டு நலனை முன் வைத்து செயல்படுவது மேல், டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களின் விவேக அரசியல் நடவடிக்கைக்கு முழு மனதுடன் ஆதரவு நல்குவதாக ஜெகநாதன் தெரிவித்தார்.

சீனர்களை கம்யூனிஸ்ட் என்று பாஸ் குற்றஞ்சாட்டுகிறது.இது ஆரோக்கியமானதல்ல. மேலும் தேசிய முன்னணியில் நம்மை போன்று மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள் என்று மூவினமும் இருப்பது சிறப்பானது. நாட்டு எதிர்கால நலனை முன்வைத்து அரசியலில் எதிரிகளுடனான கூட்டே மேல் என்று ஜெகநாதன் மேலும் தெரிவித்தார்.

துரோகிகள் முதுகில் குத்துபவர்கள், ஆனால் அதே வேளையில் எதிரிகள்  நமது வெற்றியை எதிர்த்து நமது முன்னால் இருந்து போரிடுபவர்கள். எதிரிகளிடம் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற கொள்கை கொஞ்சமாவது இருக்கும். அந்த வகையில் எதிரிகளோடு இணைந்து வேலை செய்வதை வரவேற்கிறேன்   என்று ரப்பர் தொழில் மூலம் நாடு முழுவதும் நன்கு அறிமுகமான ஆர்.ஆர்.ஐ. தோட்டத்தில் பிறந்து வளர்ந்து, தற்போது டமன்சாரா பெர்டானா வட்டாரத்தில் வசிக்கும் புஸ்பராசன் தெரிவித்தார்.

நமது வெற்றியை கண்டு படு தோல்வி அடைந்திருக்கும் தேசிய முன்னணியும் நாட்டு மக்களின் ஆதரவு பெற வேண்டி நம்முடன் இணைந்து செயல் படுவார்கள் என்று நாம் எதிர் பார்ப்போம்.

மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று டத்தோ ஸ்ரீ அன்வார் செயல் படுகிறார். அதேபோல் தேசிய முன்னணியும் நம்முடன் இணைந்து மக்களுக்கு சேவையாற்றுவார்கள் என்று எதிர்பார்ப்போம்.

தான் ஸ்ரீ முகிடின் முன்பு டத்தோ ஸ்ரீ அன்வாரருக்கு எதிராக துரோகம் செய்தவர். நம்பிக்கை கூட்டணியில் இணைந்து  பின்னர் பாஸ் மற்றும் நமது எதிரிகளோடு இணைந்து டத்தோ ஸ்ரீ அன்வார் பிரதமராக விடாமல்,  செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கு  துரோகம் செய்தவர்கள். அவர்களோடு இணைந்து  வேலை  செய்வது  ஆபத்தானது. இன்றைய நாட்டு சூழலில் எதிர்கால நலனை முன்வைத்து தேசிய முன்னணி மற்றும் சபா, சரவாக் மாநிலங்களுடன் இணைந்து செயல்படுவதை தான் ஆதரிப்பதாக புஸ்பராசன் மேலும் தெரிவித்தார்.

செய்தி சுப்பையா சுப்ரமணியம்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.