ANTARABANGSA

கியூ.சி. சர்க்கிள் அனைத்துலக மாநட்டில் தங்கம் வென்று எம்.பி.எஸ்.ஏ. வரலாறு படைத்தது

21 நவம்பர் 2022, 8:20 AM
கியூ.சி. சர்க்கிள் அனைத்துலக மாநட்டில் தங்கம் வென்று எம்.பி.எஸ்.ஏ. வரலாறு படைத்தது

ஷா ஆலம், நவ 21- இந்தோனேசியாவின் ஜாகர்த்தாவில் கடந்த வெள்ளிக் கிழமை நடைபெற்ற கியூ.சி. சர்க்கிள் அனைத்துலக மாநாட்டில் தங்கம் வென்றதன் வழி ஷா ஆலம் மாநகர் மன்றம் (எம்.பி.எஸ்.ஏ.) வரலாறு படைத்துள்ளது.

அந்த மாநாட்டில் இ.எக்ஸ்.7 குழு உறுப்பினர்கள் வாயிலாக இ.எம்.எம்.பி.எஸ்.ஏ. முறையை தாக்கல் செய்ததன் மூலம் இந்த பதக்கம் பெறப்பட்டதாக மாநகர்  மன்றம் அறிக்கை ஒன்றில் கூறியது.

பெருமை தரும் இந்த சாதனையை புரிந்த இ.எக்ஸ்7 எம்.பி.எஸ்.ஏ. குழுவினருக்கு மாநகர் மன்றம் வாயிலாக பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் என அது தெரிவித்தது.

தனியார் மற்றும் அரசு துறைகளை உள்ளடக்கிய 40 அமைப்புகளைப் பிரதிநிதித்து 65 புத்தாக்க குழுக்களின் 328 உறுப்பினர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

அனைத்துலக நிலையில் நடைபெற்ற போட்டியில் 13 நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தாக்க குழுவினர் பங்கேற்றன.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.