ANTARABANGSA

பக்காத்தான் ஹராப்பானுக்கே ஓட்டு போடுங்கள் - வில்லியம் லீயோங்

14 நவம்பர் 2022, 4:42 PM
பக்காத்தான் ஹராப்பானுக்கே ஓட்டு போடுங்கள் - வில்லியம் லீயோங்

செலாயாங், நவம்பர் 14- ஓட்டு போடுவது உங்கள் உரிமை, அதை சொல்லிக் கொடுப்பது எங்கள் கடமை. இருப்பினும் உங்கள் ஓட்டை பக்காத்தான் ஹராப்பானுக்கே அளியுங்கள் என்று மீண்டும் செலாயாங் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் சார்பில் போட்டியிடும் வில்லியம் லீயோங் இன்று  பெக்கான் குவாங்கில் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது கேட்டுக் கொண்டார்.

மக்களுக்கு சேவை செய்யவே நாங்கள் இருக்கிறோம். அந்த வேளையில்  வாக்காளர்கள் ஓட்டு போடுவதற்கு முன் பக்காத்தான் ஹராப்பான் சின்னத்தை பார்த்து ஓட்டுப் போடுங்கள் என்று அவர் அன்பாக கேட்டுக் கொண்டார்.

செலாயாங் தொகுதியில் இத்தனை ஆண்டு காலம் தனக்கு ஆதரவு அளித்து வந்த அனைத்து மக்களுக்கும் இந்த வேளையில் அவர் தம் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

மேலும் இம்முறையும் நான் செலாயாங் தொகுதியில் களம் இறங்கி உள்ளேன். இம்முறையும் மக்கள் தங்கள் மகத்தான ஆதரவையும், உற்சாகத்தையும்  தனக்கு வழங்க வேண்டும் என்றும் அவர் பேசினார்.

மீண்டும் உங்கள் ஆதரவோடு நான் வெற்றி பெற்ற பிறகு   இந்த செலாயாங் தொகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், இளைஞர்களுக்கான விளையாட்டு, வேலைவாய்ப்பு மற்றும் சொந்த தொழில் செய்ய ஆசை படுவோருக்கும் தேவையான வசதிகளை நான்  ஏற்படுத்தி தருவேன் என்று அவர் உறுதியளித்தார்

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.