ஈப்போ, நவ 5- நாட்டின் பரபரப்பான தொகுதிகளில் ஒன்றான தம்பூனில் பக்கத்தான் ஹராப்பான், பாரிசான் நேஷனல், பெரிக்கத்தான் நேஷனல், மற்றும் கெராக்கான் தானா ஆயர் ஆகிய கட்சிகளுக்கிடையே போட்டி நிலவுகிறது.
பிகேஆர் கட்சியின் தலைவரும் பக்கத்தான் ஹராப்பான் பிரதமர் வேட்பாளருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அத்தொகுதியின் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் பெர்சத்து கட்சியின் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ அகமது பைசால் அசுமு, தம்பூன் அம்னோ தொகுதி தலைவர் டத்தோ அமினுடின் முகமது ஹனிபா மற்றும் பெஜூவாங் கட்சியின் அப்துல் ரஹிம் தாஹிர் ஆகியோர் அத்தொகுதியில் களம் காண்கின்றனர்.








